இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14. திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் வைணவ தத்துவப்படி எம்பெருமானின் திருமேனி 'திவ்விய மங்கள விக்கிரகம்’ என்று வழங்கப்படும். அந்தத் திருமேனியில் சேததம், அசேதநம் என்ற தத்துவங்கள் அனைத்தும் எம்பெருமானின் ஆபரணங்களாகவும் ஆயுதங்களாகவும் இருக்கும். இதனை வைணவதத்துவம் சரீர-சரீரி பாவனை என்று பேசும். தத்துவங்கள் எம்பெரு மானின் திருமேனியில் நிற்கும் நிலையை, புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான்தண் டாகத் தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கன் சார்ங்கம்சங் காகமனம் திகிரி யாக இருடிகங்கள் ஈரைந்தும் சரங்க ளாக இருபூத மாலைவன மாலை யாகக் கருடனுரு வாம்மறையின் பொருளாய் கண்ணன்' என்று வேதாந்த தேசிகர் விளக்குவர். வேதம் கருட ணுடைய உடலாய் உள்ளது. அந்த வேதத்தின் பொரு ளாய் விளங்குபவன் எம்பெருமான். இவனுடைய திரு .--ബ 1. தே.பி.80