翠墨登 வடவேங்கடமும் திருவேங்கடமும்
எழுந்தருளியுள்ள வேங்கடவாணனின் சீர்மையையும் விதந்து கூறுகின்றார். மொழிமறை முடிமேல் எழுமுதல் அதுவே செழுவட மலைவாழ் விழுமிய பொருளே (76) (மறைமுடி-உபநிடதம்; முதல்-முதற்பொருள்; விழுமியபொருள்-பரம்பொருள்) இந்தப் பாடலால் வேதவிழுப் பொருளே வேங்கடமலை யில் எழுத்தருளியிருப்பதாகக் கூறுகின்றார். வடமலை வாழ் தேவருக்கு ஆட்பட்டால் ஏற்படும் பெருமையையும் காண்போம். யாவருக் கிந்தப் பெருமையுண் டோதுக இன் உயிர்காள்! மாவகுக் கைந்திரள் பொற்குடந் தூங்கும் வடமலைவாழ் தேவருக் காட்பட்டு வைகுந்த மே.வித் தினமிருப்போர் பூவருக் கம்பொரு தாள்கீழ்ப் படும்.எப் புவனமுமே (21) (மா.பெரிய, வருக்கை-பலாப்பழம்; பொன் குடம்-பொன்குடம் போல்; துரங்கும்-தொங் கும்; - ஆள்பட்டு-அடிமைப்பட்டு; மேவி. ஆடைந்து, பூவுருக்கம்-தாமரைப்பூவின் இனம். பொருதாள்-ஒக்கின்றதிருவடி, படும்-அடையும்) 'ஏழுமலையானுக்கு ஆட்படுபவர்கள் வைகுந்தத்தில் இருப்பார்கள்; எவ்வுல கங்களும் அவர்கள் திருவடிக்குக் கீழ்ப்படும். வேறு எந்தக் கடவுளுக்குத்தான் இந்தப் பெருமை உண்டு?" என்கின்றார் இந்தப் பாடலில்.