கம்பன் கருத்தில் திருவேங்கடம் 慧慈警
- -അാ
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலைக்குச் செல்லாது ஒதுங்கிச் செல்லுமாறு அடுத்து அறிவுறுத்துகின்றான் அக்கோமகன். கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரேல் உம்நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினால் விலங்குதிர் -நாடவிட். 29 (கோடு - சிகரங்கன், மால்வரை பெரியமலை; கொடுமை - கொடும் பாவங்கள்; வீடு உறுதிர் . மோட்சமடைவீர்:விலங்குதிர்-விலகிச் செல்லுங் கள்; என்றது காண்க. திருவேங்கடமலையை நெருங்கியவுடனே அப்புனிதத் தலத்தின் மகிமையால் கொடும் பாவங்கள் யாவும் மறைந்து வீடுபேறு கிடைத்துவிடுமாதலாலும், இதனால் இராம காரியத்திற்குக் குத்தகம் விளையுமாதலாலும் ஆம் மலையை வணங்கின நிலையில் விலகிச் செல்லுமாறு அறி வுறுத்துகின்றான். அம்மலை மிக்க தாய்மையுள்ளதாதல் பற்றி இராவணன் அங்குச் சென்றிருக்க மாட்டான் என் பது திண்ணம் என்பதையும் குறிப்பாற் புலப்படுத்து கின்றான். தெற்குத் திசை நோக்கிச் சென்ற வாணர வீரர்கள் பல இடங்களில் சீதாப்பிராட்டியைத் தேடிப் பார்த்துக் கொண்டு அருந்ததி, மரகத மலைகளைக் கடந்து இரு மலைக்கு வருகின்றனர். இந்த நிலையிலும் கம்பநாடன் திருமலையின் தன்மையைக் கூறுகின்றான் தன் கூற்றாக. முனிவரும் மறைவல்லோரும் முந்தைநாட் சிந்தை மூண்ட வினைவரு நெறியை மாற்றும் மெய்யுணர் வோரும் விண்ணோர் வ.தி-17.