17. கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் 'திருவேங்கடமுடையான் திருவாயிரம்' என்பது பல சிற்றிலக்கியங்களின் திரட்டு நூல். இதில் பல சிற்றிலக் கியங்கள் அடங்கியுள்ளன. அவை யாவும் திருவேங்கட முடையான்மீது எழுந்தவை. அவை: 1. திருப்பல்லாண்டு, 2. திருப்பள்ளி எழுக்சி, 3. திருப்பாவை, 4. கலிவெண்பா. 5. பிள்ளைத்தமிழ், 6. கலம்பகம், 7. பதிகங்கள், 8. அலங் காரம், 9. ஒருபா ஒருபஃது 19. இரட்டைமணி மாலை, 11. மும்மணிக்கோவை, 12. நான்மணி மாலை முதலி யவை. இத்தொகுப்பு நூலின் ஆசிரியர் எஸ். கே. 'இராம ராசனைப்" பத்து வயதுப் பாலகனாக இருந்த பொழு திருந்து இன்று வரை நன்கு அறிவேன். வித்துவான் துழிை 1. இது திருவேங்கடமுடையான் திருவருளால் விரை வில் வெளிவருதல் வேண்டும். 2. இவர் கம்பராமன்' என்ற சாட்டுப் பெயரினர். பழுதர ஒதிப் பகவததுபவம் பெற்றவர். வேலூர் கண்டர் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றபின் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தில் சுமார் ஆறு ஆண்டுகள் அகராதித் துறையில் பணியாற்றிய பின் சீவன் முக்தராக வாழ்ந்து வருபவர்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/293
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
