பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱莎翁 வடவேங்கடமும் திருவேங்கடமும் கள்ளத்தை நீக்கிடும் தேன்கூடு கண்டனம்; காதலொரு தெள்ளத் தெளிந்த நலமரு ளாழ்வார் செழுந்தமிழில் மெல்லச் செழித்துப் பொலிவுறு வேங்கட வெற்பிடத்தே' திருவேங்கட மலையில் ஒரு தேன்கூடு தென்படுகின்றது. அது பக்தர்கள் பாடும் நம்மாழ்வாரின் செழுந்தமிழால் மெல்லச் செழித்துச் சுவையும் பெற்றுத் திகழ்கின்றது. அத்தேனிறால் நம் உள்ளத்தில் எழும் களிப்பின் காரண மாக விளையும் துயராகிய கள்ளத்தையும் போக்கும் என்கின்றார் ஆசிரியர். இந்த அலங்காரத்தில் மற்றொரு பாடல்: "உனக்கும் எனக்கும் இடையே மறைக்கும் உளத்திரையைக் கனக்கும் கருணைக் கரத்தால் விலக்கிக் கனிந்தருள்க; சினக்கும் இரணியன் மார்பைப் பிளந்து, தெளிந்தமறை தனக்கும் புவிக்கும் உயிர்ப்பருள் வேங்கடத் தற்பரனே.” இதில் எம்பெருமானுக்கும் உயிருக்கும் இடையில் வினை வயத்தால் தோன்றி மறைக்கும் மனத்திரையை கனக்கும் கருணைக்கரத்தால் (அபயகரம்) கனிந்து நீக்கியருளுமாறு வேண்டுகின்றார் ஆசிரியர். இரணியன் மார்பைப் பிளந்து நா ன் ம ைற க் கும் புவியிலுள்ளோருக்கும் உயிர்ப்பை அருளிய திருவேங்கடமுடையானுக்கு இஃது ஒரு பெரிய செயலன்று என்பதையும் குறிப்பிடுகின்றார்.