பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமன் கருத்தில் திருவேங்கடம் 露常盘 இனி, இந்நூலில் ஒரு பொருன்மேல் மூன்றடுக்கி வரும் தாழிசைகளைக் காண்போம். குளவுபுகழ் அண்டமெலாம் கோவேதின் சந்திதியில் இலகுதனிச் சிற்றணுவா? இலைகோனின் கோணையா. அறிவென்னும் செருக்குடையார் அகிலமெலாம் திரிந்திடினும் செறிவூறுநின் ஜனைக்கானார்: திகைத்தயர் வார் பிந:கர்வார். குன்றாத பேரன்பிற் குழைவார் தம் இதயத்து நின்றாயை அரியையென நிகழ்த்துவரோ அந்தணர்கள் (கோண்-அணுவின்சதகூறு: இம்மூன்று தாழிசைகளும் படிப்போரை மனோன்மணிக நாடகத்தில் தமிழ்த்தாய் வணக்கமாக வரும் தாழிசைகளை நினைக்கச் செய்கின்றன. எம்பெருமானின் செருக்கை யும் மிடுக்கையும் மிடுக்கான நடையிலமைந்த தாழிசை கள் நினைப்பூட்டுவதையும் கண்டு மகிழலாம். கலம்பகத்தின் உறுப்புகளில் ஒன்று அம்மானை' என் பது. மூன்று மங்கையர் பந்துகளைக் கொண்டு ஆடும் விளையாட்டு இஃது என்பதை அறிதல் வேண்டும். அங்க னம் ஆடுங்கால் பாட்டுடைத் தலைவனது இயல்பினைச் சொல்லிக் கொண்டே ஆடுவார்கள் இந்த பங்கைகார். சேரலர்கோன் போற்றும் திருவேங்கட முடையான் பாரினிடை யாண்டும் பரந்துள்ளான் அம்மானை பாரினிடை யாண்டும் பரந்துளளா னாமாயின் நாரியே எவ்விடத்தும் நான்காணேன் அம்மானை நான்போனாற் காணலாம் நங்கையே அம்மானை.