275 வடவேங்கடமும் திருவேங்கடமும் மொழிபெயர்ப்பினை அதர்ப்படயாத்தல்” என்று கூறுவர். மொழிபெயர்ப்பு நூலைப் படிப்போருக்கு இஃது ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றா வண்ணம் அமைதல் வேண்டும், இந்த அரிய பண்பினை திருவேங்கடவன் மாலை என்ற தமிழ்க் கவியாக்க நூலில் கண்டு மகிழ லாம். ! ! 1. திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி : தமிழகக் குயில் திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர் களின் இன்னோசையின் மூலம் வடமொழி ரீவேங்கடேச ஸாப்ரபாதத்தை வானொலி மூலம் செவிமடுக்காத தமிழர் களே இரார் எனலாம். தொண்டரடிப் பொடியாழ் வாரின திருப்பள்ளி எழுச்சி' மணிவாசகப் பெருமானின் 'திருப்பள்ளி எழுச்சி பாரதியாரின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி'ப் பாடல்களை அறிந்தவர்கள் நாம்; இறைவனைத் துகல் எழுப்புவதாகப் பாடும் மரபினை நாம் அறிவோம். அந்த மரபினையொட்டியே வடமொழி சுப்ரபாக மரபும், வடமொழிப் பாசுரங்களை உள்ளம் உருக ஒதியும் பிறர் ஒதுங்கால், நெஞ்சு குழைந்து ஈடு பட்டும் திளைக்கும் திரு. பதுபநாபன் அவர்களை நான் நேரில் பலமுறைப் பார்த்தவன். சுமார் முப்பது ஆண்டு கட்கு முன்னர் அவரும் அடியேனும் (நான் திருப்பதியில் பணியாற்றிய காலத்தில்) சில நண்பர்களுடன் அதிகாலை யில் ஏழுமலையானை வழிபட்டது இன்னும் என் உள்ளத் தில் பசுமையாகவே உள்ளது. இனி, மொழிபெயர்ப்பின் நேர்த்தியைக் கண்டு மகிழ்வோம். 3. தொல்-பொருள்-மரபியல்-99, 4. இப்போது திரு பார்த்தசாரதி அவர்களால் தமிழில் அமைக்கப்பெற்ற பாட்ல்கள்ை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இசைச் சுருள் மூலம் இதனைக் கேட்டு மகிழலாம்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/306
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
