盛器岛 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற பாடல் திருவடிகளின் பெருமையைப் பேசுகின்றது. அடுத்த பாடல் சரம சுலோகத்தின் கருத்தை, ‘என்னையே நம்புவாய்! ஏதமே வாரா; என்னையே சரண் அடை! ஏக்கம் கொள்ளேல்!” என்று எடுத்தியம்பும் நேர்த்தி நம் உள்ளத்தைத் தொடு கின்றது. இங்வனம் பாடல்களின் அருமையையும் பெரு மையையும் சொல்லிக் கொண்டே போகலாம். 4. திருவேங்கடவன் மங்கள வாழ்த்து: இந்த துல் பதினான்கு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் திருவேங்கடவா தேவனே! மங்களம்' என்று இறுகின்றது. வடமொழிப் பாடலின் இறுதியடி மட்டி லும் பிராட்டியாரின் சேர்த்தியோடு பூரீநிவாஸ்ாய மங்க ளம் என்று இறுவதற்கேற்பத் தமிழ்ப் பாடலும் அதற். கேற்ற வடிவம் பெறுகின்றது. இந்நூலில், "பூரீய, காந்தாய கல்யாண நித்தே நிதயேர்த்திதாம் பூரீவேங்கட நிவாலாய பூரீநிவாலாய மங்களம்' என்ற வடமொழி முதற்பாடல், மல்ரான் மணாள1 மங்கள வைப்பே! நலமருள் தாயக தாடுவோர் நிதியே! திருவேங் கடம்தனில் திருப்பதி கொண்டோய்! திருமகன் நிலைய! தேவனே மங்களம்' என்று தமிழ்க் கவிதை வடிவம் கொள்ளுகின்றது. 12. திருவேங்கடவன் மங்கள வாழ்த்து-9
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/312
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
