வடவேங்கடமும் திருவேங்கடமும் தாழா அது உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரிமாண்நோன்ஞாண் வன்சிலைக் கொளி.இ அருநிறத தழுந்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுதொடை நெல்லின் நாண்மகிழ் அயருங் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்வி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ அரிதே முனா அது முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின் ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த நுண்பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே' -அகம்-61 (சிலைக்கும் ஒலிக்கும்; நோன்ஞாண் - வலிய நாண், சிலை-வில்; அருநிறம்-அரிய மார்பு; கோடு-கொம்பு, நறவு-கள்; அயரும் - சிறப்புச் செய்யும்; விழவு-திருவிழா முனா அது - மிகப் பழமை வாய்ந்த மு உறழ் - வினை డి ఫీ.డీ. விளங் கும்; ஆகம் - மார்பு; பழகுவராதல் - பயின்று தங்குதல்) என்ற பகுதியிலுள்ள 'விழவுடை விழுச்சீர் வேங்கடம்’ என்ற சொற்றொடரை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முழுவதும் சமய சம்பந்தமான விழாக்கள் மலிந் தது வேங்கடம் என்று கூறுவர். இதனால் அங்கு திருக் கோயில் இருந்தமை பெறப்படுகின்றது என்றும், அதனை மையமாகக் கொண்டே விழாக்கள் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்றும் ஊகம் செய்ய வழி அமைகிறதாகச் செப்புவர். ஆனாலும், இதனைக் கொண்டு கோயிலின்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
