சங்ககால (வட) வேங்கடம் , (2) 3. 5 வுள்ள சான்றுகளைக்கொண்டு கிட்டத்தட்ட அதன் எல் லைகளை ஒரளவு அறிந்து கொள்ளலாம். ஒங்கோல் வட் டத்தில் (இப்போது அது பிரகாசம் வட்டமாயிற்று)" கிருஷ்ணை நதிக்கருகிலுள்ள நாட்டின் வடபகுதியை புற நானூற்றில் குறிப்பிடப்பெற்றுள்ள நுங்கன்’ என்ற பெய ராலும் பட்டத்தாலும் வழங்கிய அரசர்கள் ஆண்டு வந் ததை முன் குறிப்பிட்டேன் அல்லவா? வேங்கடம் என்ற பகுதி வடதிசையில் கிருஷ்ணை நதி வரையிலுமோ அல் லது ஒங்கோலுக்குத் தெற்கில் கிருஷ்ணை நதிக்கும் வட பெண்ணைக்கும் இடையிலுள்ள பகுதியின் பாதி வரை யிலுமோ பரவியுள்ள பகுதிதான் என்பதை நிறுவுவதற்கு இக்கருத்து அடிப்படையாக அமைகின்றது. வேங்கடம்’ என்ற இப்பகுதி கிழக்குக் கடற்கரையின் அருகில் திருப்பதி மலைக்கு வேங்கடம்’ என்ற பெயர் அமைந்திருத்தலே ஒரு சான்றாக அமைகின்றது. சங்க இலக்கியங்களில் வெப்பம் மிக்க பகுதியாகக் குறிப்பிடப்பெறும் வேங்கடத் தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பகுதியின் ஒரத் திலோ இம்மலை இருந்திராவிடில் சிறந்த தமிழறிஞர் களாகத் திகழ்ந்த முதலாழ்வார்கள் இம்மலையை வேங்கடம்' என்று வழங்கியிரார். இவர்கள் பாடல்களில் சங்க இலக்கியச் சாயலும் நெறியும் நிழலிடுவதை நாம் நன்கு அறிவோம். சோணாட்டின் வட எல்லையில் கிழக்குப் பகுதியில் தொடங்குகின்றது இத்திருப்பதி மலை. இதிலிருந்து 1. வெள்ளைக்காரர்கள் நாட்டை ஆண்டகாலத்தில் ஊர்ப்பெயரையொட்டி மாவட்டப் பெயர் அமை த்தது இது நிர்வாகத்திற்கும் பிறவற்றிற்கும் வசதி யாக்க் இருந்தது. இக்காலத்தில் கட்சி அரசியலில் போட்டி போட்டுக் கொண்டு ஊர்ப்பெயர்கள் ஆள் பெயர்களாக மாற்றப் பெற்று வருகின்றன. இது குழப்பத்தை விளைவிப்பதைத்தவிர வேறு பய்ன்கர்ண்டற்கில்லை. மக்களிடையே ஏதோ ஒரு விதமாகக் உணர்வை உண்டாக்குகிறது.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
