இன்றைய திருவேங்கடம் 4? வும் அமையவில்லை. அவை ஒன்றையொன்று தழுவிய நிலையில் ஒன்று சேர்ந்த கூட்டம் போல், ஒரு குழப்பமான சுருள்போல், அமைந்து கிடக்கின்றன. பேருந்தில் மலை மேல் ஏறுபவர்கள் இருபக்கமும் நோக்கி இந்நிலையைக் கண்டு தெளியலாம். இக்குன்றுகள் கடல்மட்டத்திற்கு மேல் 1000 அடி முதல் 2500 அடி வரை உயரமுள்ளனவாக அமைந்துள் ளன. மலையெங்கும் புல் பூண்டுகள் காணப்பெறுகின் றன. இங்கும் அங்குமாகச் சிறு சிறு மரங்கள் தென்படு கின்றனவேயன்றி பெரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகள் இல்லை. மலையின் உயரங் காரணமாக தட்ப வெப்ப நிலையில் சிறிது மாற்றம் காணப்படுகின்றதே யன்றி பெரும்பாலும் அந்நிலை மலையைச் சூழ்ந்துள்ள சமவெளியின் தட்பவெட்ப நிலையையே ஒத்துள்ளது என்று கூறலாம். இன்று வனப் பாதுகாப்புத் துறையினர் பல இடங்களில் யூகலிப்டஸ் உள்ளிட்ட பல மரங்களை வளர்த்து வருகின்றனர். தேவையான மழையின்மை காரணமாக அவை நீலகிரியிலுள்ளவை போன்று செழித்து உயர்ந்து வளரவில்லை. சுமார் ஐம்பது ஆண்டு. கட்கு முன்பு ஆண்டின் சில திங்களில் மலையின்மீது மலேரியா நோய் தலைகாட்டிக் கொண்டிருந்ததாகக் கருதப் பெற்றது. ஆயினும் திருமலை,திருப்பதி தேவஸ் தானத்தார் மேற்கொண்ட அரிய முயற்சியினால் மலேரியா நோய் நிலைகள் முற்றி லும் இல்லா தொழிந் தன. இன்று நாட்டின் நாலாபுறங்களினின்றும் வரும் அடியார் கட்காக தங்கும் வசதிகளும் நீர் வசதிகளும் இயன்ற வரை நல்ல முறையில் செய்யப்பெற்று வருகின் றன. ஆண்டு தோறும் திருத்தலப் பயணிகளின் கூட்டம் பெருகிக் கொண்டே வருகின்றது. இறைவனின் கருவூல மும் பொங்கி வழிந்து கொண்டேயுள்ளது. வேங்கடம்’- சொற்பொருள் மாற்றம்: முன் கட்டு ரையொன்றில் வேங்கடம் என்ற சொல்லின் பொருள்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
