இன்றைய திருவேங்கடம் 除置 முடையானுக்குக் கைங்கரியம் செய்யும் அர்ச்சகர்க்குக் குடி பிருப்பு வசதிகள், பிற வசதிகள் இவற்றைச் செய்தார். தம் தாய் மாமனாகிய திருமலை நம்பியையே இவற்றை யெல்லாம் கண்காணிக்கும் மேலாளராகவும் நியமனம் செய்தார். இராமநுசருடைய சமூகச் சீர்திருத்தமும் அவருடைய தத்துவ ஞானமும் பாமர மக்கள் மனத்தை யும் கவர்ந்தன. அவருடைய வடமொழி அறிவு அவருக்குப் பலவகையில் கைகொடுத்து உதவியது. அவரது கீதைப் பேருரையும் பிரம்மசூத்திரப் பேருரை யும் (இரண்டும் வடமொழியில் உள்ளவை), அவரை வடநாட்டினருக்கும் அறிமுகம் செய்து வைத்தன. இத னால் இராமாதுசரின் புகழ் நாட்டின் தாலா புறங்களிலும் பரவியது. இதனால் அவர் மிக நெருங்கிய உறவுடன் கைங்கரியம் செய்து வந்த திருவேங்கடமுடை யானின் பெருமையும் சிறப்பும் எங்கும் பரவி அவன் கோயில் கொண்டிருக்கும் திருவேங்கடத்திற்கும் ஒரு முக்கியத்துவம் ஏற்படலாயிற்று இவற்றைத் தவிர சைவ-வைணவ வாக்குவாதம்பற்றிய வரலாறும் திரு மலையின் புகழ் எங்கும் பரவக் காரணமாக அமைந்தது. இது பற்றிய வரலாறு சுமார் 700 ஆண்டுகட்கு முன் பிருந்த பின் பழகியப் பெருமாள் சீயர் அருளிய ஆறாயிரப் படி குருபரம்பரையிலும் இராமாநுசாச்சாரியரின் திவ்விய, சூரி சரிதையிலும் காணலாம். திருவேங்கடத் தப்பனைச் சைவர்கள் எங்கள் நாய னார்'-எங்கள் தலைவர்-என்று உரிமை கொண்டாடிய தாக ஆறாயிரப்படி குருபரம்பரை தெரிவிக்கின்றது. இங் ங்னம் உரிமை கொண்டாடுவதற்குப் பேயாழ்வாரின் ஒரு பாசுரமும் ஒரு காரணமாக இருந்தது. தாழ்சடையும் நீள்முடியும் தண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நானும் தோன்றுமால்-சூழும்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
