பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

41

'அப்படி என்ன ராஜாங்க காரியம்? தலை போகும் காரியம்: இளையவர்கள் இப்படி இருக்கிறார்களா? காட்டில் இருந்த போது மட்டும் என்ன நிம்மதி? எப்போதும் வில்லும் அம்புமாகத் திரிந்தார்கள். அதனால்தானே பகையும் விரோதங்களும் கொலைகளும் நிகழ்ந்தன! ஜனஸ்தானக் காட்டில் அரக்கர்கள் இருந்தால் இவர்களுக்கென்ன? அவர்களும் காட்டிலே எதையேனும் கொன்று தின்று வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள்?... மகரிஷிகள் சாபம் இட்டுவிடுவார்கள் என்று இந்த மன்னர்கள் நடுநடுங்குவதாம் இவர்கள் எதற்காக ஆயிரக்கணக்கில் உயிர்வதை செய்யும் யாகங்கள் நடத்த வேண்டும்?’

கேள்விகள் மேலும் மேலும் எழ, கிணறு ஆழம் கான முடியாமல் போகிறது. உள்ளே நிச்சயம் தரை இருக்கும். அதைத் தொட்டுக் காட்டும்போது இதயமே குத்துண்டாற்போல் நோகும்.

சக்கரவர்த்தி, இளைய குமாரர்களைத் தாய்மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூத்தவள் பெற்ற பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தது நியாயமா?

நியாயமில்லைதான். அதுவும் அந்த மந்தரைப் பாட்டிக்கு என்ன விரோதம்?... அவந்திகாவைப் போல் ராணி மாதாவை எடுத்து வளர்த்தவள். அக்காலத்தில் அவர் தந்தை கேகய மன்னர், ஏதோ ஒர் அற்ப காரணத்துக்காக, குழந்தைகளின் தாயைக் காட்டில் விட்டு விட்டு வந்தாராம் என்ன கொடுமை?

அரசகுமாரியைத் தாய்போல் அன்பைப்பொழிந்து வளர்த்த அம்மை வயதான காலத்தில் இடுப்பு வளையக் கூன் விழுந்து கூனியானாள். அவளைப் பூமகள் பார்த்திருக்கிறாள். தலை தரையைத் தொட்டுவிடுமோ என்ற அளவில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு எழும்பி நடப்பாள்.

அவளுக்கு இந்த மூத்த இளவரசர் மீது என்ன விரோதம்?

சின்னஞ்சிறு இளவரசர், அந்தக் கூனை முதுகில் வில் மண் உருண்டை வைத்து அடிப்பாராம், கூனல் நிமிரவில்லை. ஆனால்... வலி... அது நல்ல எண்ணத்துடன் எய்யப்பட்ட உருண்டை