பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

45

“ஆம், இருக்கிறது. நீ செவிகளை வைத்துப் பார் தெரியும்.”

“நந்த சாமி, என் அம்மா பூமிக்கு என்னைத் தெரியுமோ இப்போது?”

“ஓ! நிச்சயமாகத் தெரியும்..!!”

“பின் ஏன் என் அம்மா, ஊர்மி, சுதா இவர்களுடைய அம்மாவைப்போல் முகம், முடி, உடம்பு கை, கால் என்று நடந்து வரவில்லை?”

“வருகிறாளே? பூமித்தாய். ரொம்ப ரொம்பப் பெரியவள். இந்த நீர் நீ தொடும் போது எப்படி இருக்கிறது? மீன் எப்படி இருக்கிறது. நீ சிரிக்கும் அழகைப் பார்க்கத்தான் இப்படி எல்லாம் மாறி உன்னைக் கவருகிறாள். அரளிப்பூவில், தாமரைப்பூக்களில், பெரிய இலைகளில் பணித்துளிகளில் மயிலின் சிறகுகளில் எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள். அவள் சிறு குஞ்சாக உன்னுள்ளும் இருக்கிறாள்.”

“எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.”

“ஒ, நிச்சயமாகப் பார்ப்பாய், ஒரு நாள்...”

“எப்போது?....” என்று ஒருவகையான பிடிவாத ஆவலுடன் அவள் சிணுங்குவாள்.

“நீ இவ்வளவு உயரம் வளர்ந்த பிறகு!” என்று தன் தலை உயரத்துக்கு அவர் கைகளை உயர்த்துவார்....

அவ்வளவு உயரம் வளர்ந்த பின்னரும் அவள் கனவுகள் மட்டுமே வளர்ந்தன. அவள் பிறப்பின் இரகசியம் புகைக்குள் பொதிந்த சுடர்போல் அவளுக்கு எட்டவில்லை.

பூமை கணவருடன் கானகத்தில் வாழ்ந்த நாட்களில், மரஉரிகளை வேடுவர்கள் கொண்டு வருவார்கள். குளிரும் மழையுமாக இருந்த நாட்களில், அந்த ஆடைகள் போதுமானதாக இருக்காது. இளையவர் முனி கூடங்களில் இருந்து ஆடைகள் வாங்கி வருவார். முனிவருக்கத்துக்கு கூடித்திரிய மன்னர்கள் வாரி