பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பெற்றோர், பிறந்த இடத்து உறவுகள் எல்லாமே ஒரு பெண்ணுக்கு மேலே போர்த்துக் கொண்ட பாதுகாப்புகள் போன்றவை; ‘மணாளர் என்று ஒருவர் உறவான பின், அந்தப் பாசங்கள் கழற்றி விடப்பட வேண்டும்’ என்பதே இன்று வரையிலும் இந்தியப் பெண்ணின் ‘தருமமா’கப் பாலிக்கப்பட்டு வருகிறது. திருமணம்தான் அவள் வாழ்வை உறுதி செய்கிறது.

பூமகள் ஒரு நாயகரைச் சேர்ந்துவிட்டாள். நாயகன் மாதாபிதாவின் வாக்கிய பரிபாலனம் செய்ய, வனம் ஏகும்போது, இவள் தங்குவாளா? இவளுக்கு ஏது பிறந்த இடம்? ‘இராமன் இருக்குமிடமே அயோத்தி’ என்ற மரபு வழக்குக்கு ஆதாரமாக வனம் ஏகினாள்.

வனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவள் கற்புக்கு நெருப்புக் கண்டம் வைத்தது.

இராமன், அரக்க வேந்தனைக் கொன்று, இவளை மீட்க வந்தபோது என்ன சொன்னான்?

“அரக்கர் மாளிகையில் அறுசுவை உணவுண்டு உயிர் வாழ்ந்தாய். உடனே உயிர் துறந்தாயில்லை. கடல் கடந்து வந்து அரக்கரைக் கொன்றது, உன்னை மீட்டு அழைத்துச் செல்வதற்காக இல்லை. வீரனின் மீது விழுந்து விட்ட பழியைப் போக்கிக் கொள்வதற்காகவே இலங்கையை வென்றேன்!”

‘வீரம்’ என்பது பழி தீர்க்கும் வன்மத்தில் விளைவதா? யாருக்கு யார் மீது பழி?

இத்தகைய சொற்களால் அந்த அருந்தவக் கொழுந்தைச் சுட்டதுடன் அவன் நிற்கவில்லை.

அவளை எரிபுகச் செய்கிறான். இத்துடன் முடிந்ததா, பழியும் சந்தேகமும்?

ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று... கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத்தங்கமாக