பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

79

வீரர்கள் காளை வண்டிகளை ஒட்டிக் கொண்டு வருகிறார்கள் அதில் பணிப்பெண்கள், ஆடல் பாடல் கருவிகள் இருக்கின்றன. ஒரு சிவிகையில் பூமையும் ஊர்மியும் அமர்ந்திருக்கின்றனர். இன்னொன்றில், சுதாவும், சுமத்திராதேவியும் அமர்ந்துள்ளனர். இன்னொரு ராணி மாதா, சுரமையுடன் வேறொரு சிவிகையில் பயணம் செய்கிறார். சில காவல் வீரர் தொடர, தேரில் சத்ருக்னர் பின்னே வருகிறார்.

சிவிகை சுமப்போரின் ஆஹீம்... ஆஹீம் என்ற ஒலி அவள் செவிகளில் விழுகின்றன. மாட்டு வண்டிப் பலகையில் பணிப்பெண்கள் ஏதேதோ பேசிவருகிறார்கள் என்று புரிகிறது. சாமளியின் சிரிப்பொலி கேட்கிறது. இந்தப் பட்டாளத்தில், ஜலஜை இடம் பெறவில்லை. மூத்த மகாராணியும் இல்லை. ஸீமந்த வைபவத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனராம்.

உடன் இருக்கும் ஊர்மி இப்போது வாய் மூடி மெளனியாக இருக்கிறாள். கண்களை முடிக் கொண்டு உட்கார்ந்தபடியே உறங்குகிறாள்.

அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள்?....

காட்டு வழியில் செல்லும்போது பூமை, திரைச்சீலையை ஒதுக்கிப் பார்க்கிறாள். காட்டுக்கே ஒரு வாசனை உண்டு. மரங்களின் மணம் மூலிகைகளின் மணம். வனவிலங்குகள் எதிர்ப்படாத வண்ணம் ஊதுகுழலால் ஊதிக் கொண்டும், தப்பட்டை கொட்டிக் கொண்டும் பணியாட்கள் செல்ல, அசைந்து அசைந்து சிவிகையில் செல்வது ஊர்மிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்களை விழித்துக் கொண்டு பல்லக்குத் தூக்கிகளின் மூச்சுக்கேற்ப தாளம் தட்டுகிறார். ‘மன்னரும் இளையவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எப்போது பார்த்தாலும் என்னதான் அரசாங்கமோ!... மாண்டவி வரக்கூடாதா? அவள் மகா தபஸ்வி போல் இப்போதுதான், விரதம், தானம், தவம் என்று மைத்துனரைப் பிரியாமல் இருக்க வழி தேடிக் கொள்வாள். அவர்கள் இட்ட பணியைச் செய்பவள்!...’