பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் இராவணனும்

157


வந்தன எனக் கொள்வது பொருந்துவதாகும். மற்றும் உள்ள உலகங்களையும் அட்ட திக்குக்களையும் தன் ஆணை வழிப்படுத்திய ஒருவனுக்கு இஃது அரிய செயலன்று. எனவே, எப்படி எண்ணினாலும் அவனைத் திராவிடனாகக் கருதத் தேவை இல்லை என்பது துணிபு.

இனி, பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் இராவணன் மரபைப் பற்றி ஆராய்கின்றார்கள். அவர்கள் பின் எவ்வளவு காரணம் காட்டினாலும், அவன் பிரமன் மரபில் வந்தவன்தான் என்பதைக் கூறாதிருக்க இயலவில்லை. அவர்தம் மரபு வழியே அவனை ஆரியன் எனத் திட்டமாகக் காட்டுகின்றது. அவர் காட்டும் மரபுப் பட்டியலை உள்ளபடியே தருகிறேன்.

பிரமன்[1]
மரீசி மனு புலத்தியன்
தேவ வாருணி
விச்சிரவசு
குபேரன்
தேவநிநி
(Devanini)
கரன்
மகோதரன்
மாரீசன்
பிரகத்தன்
கும்பினாசி
புஷ்போற்காதி
(Pushpothkathi)
திரிசிரன்
தூஷணன்
வித்யுத்
சீவூகன்
கலை
(Kalai)
இராவணன்
கும்பகர்ணன்
சூர்ப்பநகை
விபீடணன்
கேகசி
(Kekasi)

இவர்களைத் தவிர்த்து, பிரமன் மக்களுள் இருவராகிய மரீசி, மனு வழியேதான் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி, வாயு, சந்திரன் ஆகியோர் பிறந்ததையும் காட்டி


  1. Ravana the great, p. 17.