பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

―★―

ஆசிரியர் வல்லிக்கண்ணன் அவர்களுடைய ‘வல்லிக் கண்ணன் கதைகள்’ என்ற கதைத் தொகுதியை எங்களுடைய முதல் வெளியீடாக தமிழ் மக்கள் முன் சமர்ப்பிப்பதில் நாங்கள் அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.

வல்லிக்கண்ணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். சமுதாயத்தில் காணும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் புனைவதில் மிகுந்ததிறமை வாய்ந்தவர். தான் கண்ட உண்மையை அஞ்சாமல் வெளியிடும் ஆற்றல் படைத்தவர்.

இத் தொகுதியில் வெளியாகியுள்ள ‘நல்ல முத்து’ என்ற கதையின் ஆங்கில மொழி பெயர்ப்பு இந்தியாவின் தலைசிறந்த ஆங்கில வார இதழான ‘Illustrated Weekly of India’ பத்திரிகையில் ‘Fine Pearls’ என்ற பெயரிலும், ‘பெரியவளும் சின்னவளும்’ என்ற கதையின் ஆங்கிலமொழிபெயர்ப்பு ‘Hindusthan Standard’ என்ற இதழில் ‘Little Sister’ என்ற பெயரிலும் வெளியாகியுள்ளன. ‘புத்தரின் பேரன்கள்’ என்ற கதை செக் மொழி பத்திரிகையான ‘New Orient’ என்ற செக்கோஸ் லேவேகியா நாட்டு இதழில் வெளியாகியுள்ளது. “திறமையான புலமையெனில் வெளி நாட்டார் வணக்கம் செய்வர்” என்ற வாக்கு வல்லிக்கண்னன் கதைகளைப் பொருத்தவரை உண்மையாகிவிட்டது.

தமிழ் நாட்டு வாசகர்கள் இக் கதைத் தொகுதியை, மிக ஆவலுடன் வரவேற்பார்கள் என எண்ணுகிறோம்.

கயிலைப் பதிப்பகத்தார்.