பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




ஆரம்பம் :

விஷயத்தைச் கேள்வியுற்ற ஒண்டிப்புலியா பிள்ளை, கறுக்கரிவாள் நுனி போல் கூர்த்து நின்ற மீசையிலே கைபோட்டு முறுக்கியபடி கனைப்புச் சிரிப்பு உதிர்த்தார்.

“இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளைவாள் நல்லதுக்காக இந்த ஊருக்கு வரவில்லை என்று நான் அப்பவே நெனெச்சேன். அவனுடைய நல்ல காலம் இந்த ஊரு எல்லையை மிதிச்ச உடனேயே அவனை விட்டுப் போயிட்டுது. ஐயாவாள் கிட்டே எவன் வாலாட்டினாலும் சரி, அவன் தொலைஞ்சான்னுதான் அர்த்தம். ஆகவே எல்லைக்கு நாதன் ஒழிஞ்சான்; அவன் பெண்டாட்டி இப்பவே தாலியறுத்த மாதிரிதான். இதை நீரு நிச்சயமாக நம்பலாம் வேய் !”

இப்படி அவர் தனது அந்தரங்க நண்பர் ஒருவரிடம் சொன்னார்.