பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j is வள்ளுவர் வாழ்த்து

ஈகையினும் சிறந்தது

கண்ணன் : இன் சொல் எவ்வளவு நன்மையைக் கொண்டது தந்தையே ?

தந்தை உள்ளம் விரும்பி ஈதல் சிறந்தது. அதை விட முகம் மலர்ந்து இனிய சொல்லச் சொல்பவன் ஆதல் சிறந்தது,

கண்ணன் : இன்சொல் ஈகையைவிடச் சிறந்தது ஆகின்றதே !

தந்தை ஆம் ஈபவர் உள்ளம் உவந்து ஈதல் வேண்டும். பெறுபவரும் உள்ளம் மகிழ்ந்து பெறுதல் வேண்டு. கொடுப்பவர், உள்ளம் மட்டும் உவப்போடு கடும் சொற்களைச் சொல்லிக் கொடுப்பாராளுல் பெறுபவர் உள்ளம் மகிழுமோ ? அதஞல், இன் சொல் இல்லாத ஈகை தனக்கு உரிய சிறப்பை இழக்கும். ஆகையால், இன்சொல் ஈகையை விடச் சிறக்கும். அதனுல்தான், "ஈகையால் மக்களைக் காக்கும் மன்னன் இன் சொல் லோடு ஈத்தால்தான் அவன் எண்ணப்படியே உலகம் அவனைப் பின்பற்றும் என்று நான் மன்னர்க்குரிய அறி வுரையில் குறித்துள்ளேன். (குறள் 387) அஃதொடு இன்சொல்லைச் சொல்வதே ஒரு அறம்.

கண்ணன் ஆம், முன்னர் அறத்தை விளக்கிய போது இன்னுத சொல் இன்றி இயங்குவது அறம் என்று தாங்கள் குறித்தது நினைவிற்கு வருகிறது.

........ ............... - TamilBOT (பேச்சு) 01:31, 31 ஜனவரி 2016 (UTC)్వ

  • அகமணமர்ந் தீதலின் கன்றே, முகனமர்க்

தின்சொல கைப் பெறின்,