பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் வாழ்த்து

திற்கு உகந்தனவே செய்து தவறிழைப்பினும் அவரைக் கானது என் கண்கள் அமைதியுறவில்லையே ; அலைகின் றனவே-என்கின்ற பெண்ணே அன்புப்பிணைப்பிற்குரிய மனையாளாவாள்,

எத்துணைப் பெருந்தவற்றை மணுளன் செய்தாலும் அவன் இல்லாத போதுதான் தவறுகளை எண்ணிக் குறைப்படவேண்டும். பிரிந்து சென்றவன் பரிந்து மீளுங் கால் அவனைக் கண்டவுடன் தவறுகண்டு குறைப்பட்ட உள்ளம் மாறிவிடவேண்டும். அஃதன்றிப் பணிமுடித்துப் பனிமொழி கேட்டுப்பூரிப்போம் என்று வருகின்ற மளுள னுக்கு வன்முகங் காட்டுதல் நன்ருகாது. எவ்வகைத் தவற்றை மணுளன் இழைத்திருப்பினும், அவரைக் காணுதபோது தவறல்லா கல்லனவற்றைக் கண்டே விைல்லை; அவரை என் முன்னே காணும் போதோ அத் தவறுகள் யாவற்றையும் அடியோடு கண்டேனில்லையே-- என்னும் பெருந்தன்மையான உள்ளம், பெண்மகளி டத்தே பிறக்க வேண்டும்.

மணுளன் ஓர் அமிழ்தம்

மனையாளிடத்தே இந்த உள்ளம் நிலைப்பதற்கு மேலாக இந்த உள்ளத்தை உணரும் பண்பு மணுள னிடத்தில் நிலைக்க வேண்டும். பெண்மகளது பெருந் தன்மையை ஏற்கும் தகுதி படைத்தவகை ஆண்மகன் ஆகவேண்டும். அப்பொழுதுதான் அவள் உள்ளம் உடையாது; அழியாது. அவள் உள்ளத்திற்கும் அதன் மூலம் அவளுக்கும் அமிழ்தமாகி வாழ்வளித்தவன்

SAASAASAASAASAASAASAASAAAS TamilBOT (பேச்சு)్వ :ధానా

  • கானுங்கால் காணேன் தவருய; காணுக்கால்

காணேன் தவறல் லவை.