பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 45

யறையை உடையது. ஊடலுக்கு ஏற்ற உவமையா யமைந்த உப்பு, நீரின் உறைவுதானே ! ஆகையால் நீருக்குள்ள தன்மை உப்புக்குள் உறைந்து கிடக்கு மன்ருே நீரிலிருந்துதானே உப்பு உருப் பெற்றது. எனவே, அந்நீரின் தன்மைகள் உப்பினை ஒத்த ஊடலுக் கும் பொருந்தும்.

நீரின் இயற்கை தண்மை யாகும். தண்ணிய நீரே நன்மை தருவது. நீரின் தண்மை செங்கதிரால் வெம்மை யாகுமாளுல் அந்தவெந்நீர் அத்துணை நன்மை உடையதன்று; இன்னுமையையும் தரும். அதனுல்தான் இயற்கையமைப்புக்கள் நீரின் தண்மையைக் காப்பாற் றும் வகையில் உள்ளன. கேணி, ஊருணி, குளம், ஆறு முதலியவற்றின் கரையிலே மரங்கள் தழைத்து வளர்ந்து அவற்றின் தண்மையைக் காக்கின்றன. எனவே தான், நீர் இயற்கையில் தண்மையுற்றுப் பருகிட நன்மையும், பயனும், வேட்கைத் தணிப்பும் தருகின்றது.

ஊடலை இவ்வகை நீரென்றல் பொருந்தும். ஊடல் அளவோடு அமைவதே நல்லதென்று கண்டோம். அது மேலும் இனியதாவது அதனை ஏற்கும் மணுளனது அன்பைப் பொறுத்ததாகும். மணுளன் நிறைந்த அன்பினனுக-மனையாளது பிணக்கிலும் ஒரு மகிழ்வைக் கொள்பவகை-அப்பிணக்கும் அவள் தன்மேல் கொண் டிருக்கும் அன்பின் நிறைவை உள்ளடக்கியதே என்று உணர்பவனுக அமைய வேண்டும். அந்தகையோ னிடத்தே கொள்ளும் ஊடல் தான் இனிமை தரும். * நீரும் கிழலின்கண் அமைந்ததால்ை இனியதாகும். அது போல் ஊடலும் கிறைந்த அன்புடையார் மாட்டுத்தான்

SAASAASAASAASAASAASAASAASAASAAAS --TamilBOT (பேச்சு) -ബ്-- :స:సుపుపచ్రస:సెసి:

  • நீரும் நிழல திணிதே; புலவியும்

வீழுகர் கண்ணே இனிது.