பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 85

மகனே, நீயும் மழலைச் சொற்களின் இனிமையைச் சுவைக்கும் வாய்ப்பைப் பெருதவன். அதனுல்தான் உனக்கு இவைகள் இனிமையாகப் படுகின்றன. உன் னைப் போலவே, "தம் மக்களது மழலைச் சொற்களைக் கேட்காதவர்கள் குழல் தரும் இசை இனியது என்பர். யாழ் தரும் இசை இனியது என்பர். தம் மக்களது மழலை யைக் கேட்டவர்களோ மழலைச் சொற்களே இனிமை இனிமை ; அவற்ருல் பெறும் இன்பமே இன்பம் என்பர்-என்று கூறிக் கண்ணனைப் பார்த்தார் வள்ளு வத் தந்தை. -

கண்ணனே பச்சைச் சிரிப்போடு தலை குனிந்து கொண்டான். கண்ணம்மாள் முகத்தில் பொருள் தெரிக் கும் அறிகுறி தோன்றியது.-இதுவரை காதைக் கெடுத் துக் கொண்டு வந்திருக்கிருேமே ! என்ருலும் காது கெட்ட கேட்டை எல்லாம் சேர்த்துப் பேரின்பம் பெறும் வாய்ப்பில் இருக்கிருேம்-என்ற மாற்று எண்ணங்களை முகம் அறிவித்தது. பேச்சுக்கு வாய் எழவில்லை; தந்தை தொடர்ந்தார்;

தன்னலமும் பொதுநலமும்

மக்காள், நீங்கள் உங்களது கடந்த காலத் ைச எண்ணி வருந்துவதற்கு உரியவர்கள் அல்லர். எதி காலத்தை எண்ணி நிகழ்காலப்பூரிப்புக் கொள்ளும் முத, படியில் உள்ளவர்கள். அந்தப் பூரிப்பு முழுமையாகத் திகழவேண்டுமானல் அதற்கு நீங்கள் ஏற்கவேண்டிய பொறுப்புக்கள் உண்டு. மக்களைப் பேணி வளர்க்கும்

E::స్విషి:R::RTamilBOT (பேச்சு) 01:27, 31 ஜனவரி 2016 (UTC)

  • குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.