பக்கம்:வாழையடி வாழை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 'வாழையடி வாழை'


வாராதவர்கள் புதிய செல்வத்தின் சிறப்பினைப் பாராட்டி மகிழலாம் அல்லவா!

பழைய 'வில்லிப்புத்தூரார் பாரதத்'தைப் படிக்கும் பொழுது, கவிதை ஆற்றலின் சிறப்பிலே, கவிஞரின் பாவிகப்பண்பிலே, உவமையழகிலே, சொல்நயத்திலே வியந்து மகிழ்ந்து நிற்கிறோம்! ஆனால், அதே நேரத்தில் இந்த நூற்றாண்டுக் கவிஞராம் பாரதியாரின் புதிய 'பாஞ்சாலி சபதத்தைப்' படிக்கின்ற பொழுது, அன்னை பாரதமாதா அன்னியர் பிடியிலே கட்டுண்டிருந்த நிலை நம் கண்முன் வரவில்லையா? நமக்கு ஓர் உணர்வினையும் வேகத்தினையும் அளிக்கவில்லையா? வில்லிபுத்தூரார் பாரதத்தை வியந்த நாம், பாஞ்சாலி சபதத்தைப் படித்து, மகிழ்வோடு பயனும் பெறுகின்றாேம். இவ்வகையாகக் காணினும் இன்றைய இலக்கியங்களை மாணவர்கள் படிக்க வேண்டுவது அவசியமாகின்றது.

இந்தத் தலைமுறையில்சமுதாயத்தின் நலக்கேட்டினைக் காண, இன்றைய இலக்கியங்களே பேரளவில் துணை செய்யக்கூடும். புதிய புரட்சிகளை உருவாக்கிப் புதிய உலகைக் காணவே புத்திலக்கியங்கள் சில பாடு பட்டுள்ளன.

தொன்மையவாம் எனுமஎவையும் நன்றாகா; இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா

என்பது சான்றாேர் வாக்கு. பழைமை அனைத்தும் நன்மை தருவன என்றாே, புதுமை அனைத்தும் புறக் கணிக்கத் தகுந்தவை என்றோ விரைந்து ஒர் முடிவிற்கு நாம் வந்து விடக்கூடாது.

மேலும், படைப்புக் கற்பனைத்திறம் வளர வேண்டுமானால், 'இன்று எழுதுகின்றவர்கள் எப்படி எழுதுகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/10&oldid=1461201" இலிருந்து மீள்விக்கப்பட்டது