பக்கம்:வாழையடி வாழை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 99

'அனற்கொள்ளி பட்டபிள்ளை கதறும் போதில்
அம்மாஎன் பதுபோலே’
—இயல் 37 : 3.


'மணமிழந்த விரிமலரைப் போலிருந்தாள்.’
—இயல் 39 : 2.


'கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு மீளும்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர்
மழைக்கண்ணீர் உகுத்தது வான்’
—இயல் 53 : 1


பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போலப்
பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி!’
—இயல் 53 : 1


 தீனியிட்டுக் கோழியினை மடக்கு வார்போல்
மூடிவிட்டார் பேழையினை.”
—இயல் 57: 10


'கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை
கீழ்க்கடலின் மாலைவெயில் கலந்த நீல
ஒளித்திரைபோல் தலைமயிர்ச்சங் கத்தின் தோற்றம்
உயிர்ப்பரிதி வான்போன்ற மேனி வாய்ந்தான்:'
—இயல் 62 : 4

'பணையி னின்று
'காய் இற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன்
கருந்தலைவீழ்ந் ததுவே அன் னத்தின் வாளால்!.
—இயல் 74: 1


பாரதிதாசன் கவிதைகள் : I

'கோட்டைப் பவுன் உருக்கிச் — செய்த
குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள்’
—இயல் 20: 1


'வெள்ளம்போல் தமிழர் கூட்டம்.’
—இயல் 3: 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/101&oldid=1350014" இலிருந்து மீள்விக்கப்பட்டது