பக்கம்:வாழையடி வாழை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

‘வாழையடி வாழை’

'கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்’

எந்நாளோ? : 9


பாரதிதாசன் கவிதைகள் II

'மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்மணி விழியும் பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள்’

கற்பனை உலகம்: 4


எதிர்பாராத முத்தம்:

'தணலிலே நின்றிருப்போர் தண்ணீரில் தாவுதல்போல்
எழுத்தினை விழிகள் தாவ இதயத்தால் வாசிக்கின்றான்’

க்ஷ்— 8 : 2 , 3


பழைய மரபினையொட்டியும் பாடல்கள் பாடுவதில் பாவேந்தர் பாரதிதாசனார் வல்லவராய்த் திகழ்கிறார். சான்றாகக் 'காண்பவை எல்லாம் அவளே போறல்’ என்ற தமிழ் இலக்கண மரபுப்படி, காதலியைக் காணாது ஏங்கித்தவிக்கும் காதலன், எப்பொருளை நோக்கினாலும் அப்பொருளில் தன் காதலியின் உருவத்தினையே காண்கின்றான்:

'ஆடப்போம் புனலிலெல்லாம் அவளே! காற்றில்
அசையப்போம் பொழிலிலெலாம் அவளே! கண்ணால்
தேடப்போம் பொருளிலெலாம் அவளே! நேரில்
தின்னப்போம் சுவையிலெலாம் அவளே! வண்டு
பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில்
படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/102&oldid=1461276" இலிருந்து மீள்விக்கப்பட்டது