பக்கம்:வாழையடி வாழை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. கவிஞனும் கவிதையும்


"தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.”

என்று தமிழ்த்தாயின் பழமையினைப் பலபடப் பாராட்டிப் பேசினார் பைந்தமிழ்ப் பாவலர் பாரதியார். தமிழினம் மிகப்பழைய இனம்; மொழி மிக்க தொன்மையுடையது. மொழி நமது எண்ணத்தை எடுத்தியம்பப் பயன்படுகிறது. மனிதன் தன் வாழ்வின் தொடக்க நாளிலே தன் கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்தக் கண், கை, ஏனைய உறுப்புகளின் அசைவுகளைக் கையாண்டான். இப்பொழுது நாம் காது கேளாத, படிக்கவும் அறியாத ஊமை ஒருவனுக்கு எப்படிச் செய்திகளை அறிவுறுத்துகிறோமோ, அப்படித்தான் தொடக்கக் கால மனிதனும் வாழ்ந்தான். இக்குறிகள், சைகைகள் முதலியன ஒரளவு அவன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தின எனலாம்; முற்றவும் உணர்த்தின என்று கூற இயலாது. அவன் ஒளியற்ற இராக்காலங்களில் தன்னுடைய கருத்தை அடுத்தவனுக்கு உணர்த்தப் பெரிதும் இடர்ப்பாடுற்றிருப்பான். சில நேரங்களில் அவன் குறியீடுகள் அவன் உணர்த்த நினைத்ததற்கு மாறான கருத்துகளைக்கூட மற்றவன் நெஞ்சில் விளைவித்துவிட்டிருக்கும். எனவே, தன் கருத்துகளை உணர்த்த வேறு முறையினைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியத்திற்கு அவன் ஆட்பட்டான். 'தேவை தானே புதிய படைப்புக்குக் காரணம்?’1 எனவே, குறியீடு


1. Necessity is the mother of invention.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/12&oldid=1461203" இலிருந்து மீள்விக்கப்பட்டது