பக்கம்:வாழையடி வாழை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞனும் கவிதையும் 13


ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானிடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்குங்
கோற்றாெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்,
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
வேயின் குழலோடு விணைமுத லாமனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி,
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றாெலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்!”

குயிற் பாட்டு, 2844


கவிஞன் தான் காண்கின்ற பொருள்களின் மேல் தன் கற்பனையை ஏற்றுகின்றான். அவன் கற்பனை யோடு ஒரு வடிவம் தந்து கலைமெருகுடன் நமக்குத் தரும் பொழுது இனையில்லாத கவிதையாகிறது. இதனைப் பாரதியாரே குயிற் பாட்டில்,

'முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன்யான்'

குயிற் பாட்டு: 2224


என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு தங்கு தடையற்றுப் பொங்குகின்ற உள்ளத்து உணர்ச்சிகள், அமைதியில் மீண்டும் நினைவுறுத்தப்பட்டுக் கவிதை வடிவு பெறுகின்றன என்று, இயற்கையைப் பற்றிப் பாடுவதில் இணையிலாக் கவிஞரான 'வோர்ட்ஸ்வொர்த்து' (Wordsworth) என்பார், பாட்டிற்கு இலக்கணம் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/15&oldid=1461205" இலிருந்து மீள்விக்கப்பட்டது