பக்கம்:வாழையடி வாழை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞனும் கவிதையும் 15


நமக்குக் கவிதையாக்கித் தரும்பொழுது நாம் மகிழ்கிறோம்; நம்மை மறந்து கவிதையழகில் நெஞ்சைப் பறிகொடுக்கிறோம்! சான்றாக, பாரதியார் காலைக் கதிரழகினைப் பாடும் பொழுது

'தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனுக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ!'

குயிற் பாட்டு, 3132


என்றும்,

'புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினை'

குயிற் பாட்டு, 4042


என்றும் வருணிக்கின்ற பொழுதுகவிதை வயப்படாத நெஞ்சங்கள் இருக்க இயலுமா? அதே காட்சியினைப் பாடுகின்றார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இணையிலாப் புலவராகிய 'நக்கீரர்.'

அவர்,

'உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு'

திருமுருகு: 12


என்று ஞாயிற்றின் 'கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பினை’ப் பாடும்பொழுது, அதன்பால் ஈர்க்கப் படாத நெஞ்சமும் உண்டோ?

பாரதியாருக்குப் பின்னர்ப் பாவேந்தராயும் புதுவைக் குயிலாயும் விளங்கிய பாரதிதாசனார் அவர்கள் கவிதை பெற்ற இடங்களைக் காண்போம்:


காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/17&oldid=1461207" இலிருந்து மீள்விக்கப்பட்டது