பக்கம்:வாழையடி வாழை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

‘வாழையடி வாழை’


'அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.'

திருமந்திரம்: 192


இதே முறையில்தான், 'கடுவெளிச் சித்தரும்' கூறியுள்ளார். அரும்பாடு பட்டுப் பெற்ற பிறவியினைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் கெடுத்துக் கொண்ட ஒரு மனிதனின் வாழ்வினை நயம்பட உணர்த்துகின்றார் கடுவெளிச் சித்தர்:

'நந்த வனத்திலோர் ஆண்டிஅவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தான் ஒரு தோண்டி:மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி’

என்பது அவர் தம் பாட்டு.

வள்ளலாரும், பின் வரும் பாடலில் நிலையாமை குறித்துப் பேசுகின்றார்:


'வெவ்வினைக் கீடான காயமிது மாயமென
வேதமுதல் ஆகமமெலாம்
மிகுபறை யறைந்தும்இது வெயின் மஞ்சள் நிறமெனும்
விவேகர்சொல் கேட்டறிந்தும்
கவ்வைபெறு கடலுலகில் வைரமலை யொத்தவர்
கணத்திடை இறத்தல் பலகால்
கண்ணுறக் கண்டும்இப் புலையுடலின் மரணம்ஓர்
கடுகளவும் விடுவதறியேன்.”

திருஅருட்பா: திருவண்ணப்பதிகம்


அத்தகைய அரிய பிறவி பெற்ற மக்கள், செயற் கரிய செயல் செய்த செம்மைச் சான்றாேர்களாய்ப் பெரியோர்களாய்த் துலங்குகின்றார்கள். செயற்கரிய செய்த பெரியார், வடலூர் வள்ளலார், சான்றாேர் நெறி நின்ற தூயவர்: நல்லவர் நெறியினை நாள்தோறும் போற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/24&oldid=1461214" இலிருந்து மீள்விக்கப்பட்டது