பக்கம்:வாழையடி வாழை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

‘வாழையடி வாழை’


பற்று என்பது பிறவியினால் விளைவது. பிறப்பற்ற காலையில் பற்றும் ஒடுங்குகின்றது. பற்றற்ற பரமனடியினைச் சேரும் நாளே, நெஞ்சத்தைவிட்டு ஆசை அற்றுப்போகும் நாளாகும். வள்ளுவப் பெருந்தகை யாரும்,

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.’

திருக்குறள்: 10


என்றார். 'மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்பாதமே மனம் 'பாவித்தேன்’ என்றார் 'சுந்தர மூர்த்தி நாயனார். திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையும், 'சிவமாக்கி எனையாண்ட அத்தன்’ என்பார். மணிவாசகப் பெருந்தகையாரிடத்தில் அளவில்லாத : ஈடுபாடு உடையவர் வள்ளலார் என்பது,

'வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்
சுவை கலந்தென்
ஊன் கலந்து பால்கலங்து உவட்டாம லினிப்பதுவே'

என்னும் அருட்பாவால் இனிது விளங்கும். எனவே, திருவருட் பிரகாச வள்ளலாரும்,


'சிவமாக்கிக் கொண்டானென் றூதூது சங்கே!
சிற்றம் பலத்தானென் றூதூது சங்கே!
நவநோக் களித்தானென் றூதூது சங்கே!
நானவ னானேனென் றூதூது சங்கே!
இறவாமை யிந்தானென் றூதூது சங்கே!
எண்ணம் பலித்ததென் றூதூது சங்கே!
திறமே யளித்தானென் றூதூது சங்கே!
சிற்றம் பலத்தா னென் றூதூது சங்கே!

சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தமென தாச்சு;
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/26&oldid=1349932" இலிருந்து மீள்விக்கப்பட்டது