பக்கம்:வாழையடி வாழை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வாழையடி வாழை' 27


உயிர் மறந்தாலும், உயிரை உடல் மறந்தாலும், கற்ற கலைகளை நெஞ்சம் மறந்தாலும், கண்கள் இமைக்கும் தொழிலை மறந்தாலும், நற்றவத்தவர் நெஞ்சில் நடுநாயகமாய் விளங்கும் நமசிவாயத்தை நான் மறவேன்’ என்கிறார் வள்ளலார், இது எத்தகைய உறுதிப்பாடு! இதனாலன்றாே "சிவாய நம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்றபடி, நாவுக்கரசரும், "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பதாம், நாதன் நாமமாம் நமச்சிவாயத்தை" வழுத்திய வண்ணம் துணிவோடு நின்றார்; அகப்பகையினையும் புறப்பகையினையும் வென்றார்!

இம்முறையிலே ஒர் ஐயப்பாட்டினைச் சிலர் கூறுவர். 'வீடு வீடாகச் சென்று இரந்து பிச்சை கேட்கும் இறைவனை யாவர்க்கும் மேலான இறை பதத்தினை அளிக்க வல்லவன்?’ என்ற ஐயப்பாடே அது. இடைக் காலத்தில் பரசமயத்தினைச் சேர்ந்தவர்கள் கிளப்பிய வாதம் இது! இதனைத் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர், 'இசை வாது வென்ற படலத்தில்’ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

'குடங்கை நீரும் பச்சிலையும்
இடுவார்க் கிமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையுந்
தருவாய் மதுரைப் பரமேட்டி!
படங்கொள் பாயும் பூவணையுந்
தருவாய் கையிற் படுதலை கொண்டு
இடங்கள் தோறும் இரப்பாயென்
றேசு வார்க்கென் பேசுவனே!”

திருவிளையாடற் புராணம்: இசைவாது வென்ற படலம்: 34


உள்ளத் துாய்மையோடு எளிய பொருள்களையும் இறைவன் அடியில் இட்டு வணங்கினால், இடங்கள் தோறும் சென்று இரக்கும் இறைவன் பரமபதம் அருளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/29&oldid=1461218" இலிருந்து மீள்விக்கப்பட்டது