பக்கம்:வாழையடி வாழை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வாழையடி வாழை' 29


'இருளேது; காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ!'
என்னுதே மங்கலமா யேற்றுதலாங் கண்டாய்,
மருளேலங் கவர்மேனி விளக்கமதென் கடந்த
மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினுஞ்சா லாதே!’

திருவருட்பா: அனுபவமாலை: 24


இப்பாடலில், 'தெருளாய பசுநெய்யே விடுக; மற்றை மெய்யேல் திருமேனிக் கொருமாசு செய்தாலுஞ் செய்யும்' என்னும் அடி, நினைந்து நினைந்து உருகுதற் குரியது.

இத்தகு முறையில் எளிய இனிய பாடல்களால் செம்மை நெறி காட்டிய சான்றாேர் சிதம்பரம் இராமலிங்க அடிகள். 'எத்துணையும் பேதமுறாது' எனத் தொடங்கும் பாடலில், இறைவன் திருநடமிடும் இடத்தினைத் தேர்ந்து தெளிவதோடு,

'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு’

திருக்குறள்: 261


என்றபடி, தவவாழ்வின் சீர்மையினையும் துலக்குகின்றார்

இவ்வாறாக, திருவருட்பிரகாச வள்ளலார் உலகம் உய்யத் தோன்றிய உத்தமருள் ஒருவர்; கணியன் பூங்குன்றனார் உணர்த்திய உலக ஒருமைப்பாட்டினை நங்கு உணர்ந்தவர்; திருமூலர், திருகாவுக்கரசர், மாணிக்கவாசகர், தாயுமானவர் உள்ளிட்டார் அருள் நெறியில் 'வாழையடி வாழை' யென வந்த திருகூட்டத்தின் மரபில் ஒருவர்; ஒப்பற்றவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒளி விளக்காய்த் திகழ்ந்து, இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் கோடியாண்டு, பாரில் ஓளிவீசித் திகழப்போகும் ஒளிவிளக்கு; ஞானவிளக்கு; சீர்திருத்தச் செம்மல் அத்தகைய ஒளிவிளக்கு, நம் மனமாக்களையெல்லாம் களைந்து, மனத்துக்கண் மாசிலன் ஆக்கி, 'வையத்து வாழ்வாங்கு வாழ' வைப்பதாக என்று கூறி, அவனருளாலே அவன் தாளினை வாழ்த்தி நிற்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/31&oldid=1461220" இலிருந்து மீள்விக்கப்பட்டது