பக்கம்:வாழையடி வாழை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. 'பாட்டுக்கொரு புலவன் பாரதி’


இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய தமிழ்க்கவிஞருள் தலையாயதோர் இடத்தினைப் பாரதியார் பெறுகின்றார், அவர் வாழ்ந்த காலம், பாரத நாடு தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை பெறாதிருந்த காலமாகும். அவர் நெஞ்சில் பொங்கியெழுந்த சுதந்திரக்கனல் விடுதலை வேட்கையின் வெறியில் மூண்டு, அடிமைத் தளையில் கட்டுண்டு, அல்லலுற்றுக் கிடந்த மக்களை தட்டியெழுப்பி, உணர்ச்சி ஊட்டியது. அன்னிய ஆட்சியின் அலங்கோலத்தைக் கவிதையில் வடித்துக்காட்டி மக்களிடையே ஒரு புதிய வேகத்தினை உண்டு பண்ணியவை அவருடைய பாடல்கள். மொழிப்பற்று அற்றுக் கிடந்த மக்களுக்கு மொழிப்பற்று ஊட்டி, நாடு வாழ நல்லவர் உள்ளமெல்லாம் நலிவின்றி வாழ, நல்ல செஞ்சொற் கவிதைகளைச் சிந்தையினிக்கத் தந்தவர் பாரதியாரே எனில், அக்கூற்றில் பொய்மை கலந்திருக்க இயலாது.

மொழிப்பற்றினை முதலில் ஊட்டி , அதன் பின்னr நாட்டுப்பற்றினை வளர்த்து, ஒரு புதிய பாரத சமுதாயம் உருவாவதற்கு உறுதுணையாக நின்றார் பாரதியார். அவர் பிறந்த காலத்தில், தமிழர்கள் ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து, தமிழ்ப்பற்றுச் சிறிதும் அற்ற நிலையில் கிடந்தார்கள். எனவே, பாரதியார் வீறு கொண்டு எழுந்தார். ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து, அன்னை மொழியை மறந்த நன்றியில்லாத் தமிழரைப் பார்த்து

'வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போபோபோ'
போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/32&oldid=1461221" இலிருந்து மீள்விக்கப்பட்டது