பக்கம்:வாழையடி வாழை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

‘வாழையடி வாழை’


‘இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்வனவாசம்’ என்று 'செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில்’

'வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோஎன்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?’

சுதந்திரப் பெருமை:

என்ற விடுதலைக் கீதங்களை இயற்றி, மக்கட்சமுதாயத்தில் புரட்சிக்கனல் பொங்கியெழப் பெரிதும் காரணராயிருந்தார் பாரதியார். 'பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்னும் தலைப்பில் காணும்,

'அறத்தினால் வீழ்ந்து விட்டாய்:
அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையைப் பொறுத்தல் செய்தாய்,
முறத்தினாற் புலியைக் காக்கும்
மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
செய்கையால் உயர்ந்து நின்றாய்!’

என்னும் பகுதி அன்பின் வெற்றிபண்பின் வெற்றி, பண்பாட்டின் வெற்றி-தோல்வியில் வெற்றி என்று குறிப்பிட இயைந்ததாகும்.

மாந்தர் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தையராய், ‘ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்' என்று வாழ்ந்ததால், உலகு இன்பக்கேணியாகும் என்று உணர்த்தினார் பாரதியார். 'வண்ணங்கள் வேற்றுமைப்படினும், மானிடர் வேற்றுமைப்படுவதில்லை' என்று கூறி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/40&oldid=1461228" இலிருந்து மீள்விக்கப்பட்டது