பக்கம்:வாழையடி வாழை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 41

'உனக்கெயென் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்சேதம் யாவினையும் மாற்றிஎனக்கேநீ
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.’

என வேண்டுகிறார். அடுத்து, தென்மலைக் காட்டிலே, சொல்லினைத் தேனிற்குழைத்துரைக்கும் சிறு வள்ளியைக் கண்டு சொக்கி மரமென நின்ற வேலவனை,

'கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல்’

என்கிறார், மோனை நயம கனிந்த இப்பாடல், ஒலி நயம் பயப்பதனைக் காணலாம்.

'வீரத் திருவிழிப்பார்வையும்வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றேஎந்த
நேரத் திலும்என்னைக் காக்குமே!’

என்று, வேலும் மயிலும் துணை என்ற தாரக மந்திரத்தைச் சாற்றுகின்றார். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' எங்கள் 'இறைவா, இறைவா. இறைவா!' என்று ஆனந்தக் கூத்தாடும் பாரதியார், தன் வழிபடு தெய்வமாம் பராசக்தியினைக் 'காணி நிலம் வேண்டும்' என்று வரங் கேட்கின்றார். பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டு உயரிய படைப்பு. இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வினை எடுத்தியம்பும் இப்பாடலில், பாரதியார் வேண்டும் வாழ்வினை அவர் கவிதை கொண்டே காணலாம்:

'காணி நிலம்வேண்டும்;பராசக்தி
காணி நிலம்வேண்டும்;அங்கு,
தூணில் அழகியதாய்நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்அந்தக்
காணி நிலத்திடையேஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்;அங்கு,
கேணியருகினிலேதென்னைமரம்
கீற்று மிளநீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/43&oldid=1461231" இலிருந்து மீள்விக்கப்பட்டது