பக்கம்:வாழையடி வாழை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

‘வாழையடி வாழை’

:பத்துப் பன்னிரெண்டுதென்னைமரம்
பக்கத்திலே வேணும்;நல்ல
முத்துச் சுடர்போல நிலாவொளி
முன்பு வரவேண்டும்;என்றன்
சித்தம் மகிழ்ந்திடவேநன்றாயிளகந்
தென்றல் வரவேணும்;
பாட்டுக் கலந்திடவேஅங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும்;எங்கள்
கூட்டுக் களியினிலேகவிதைகள்
கொண்டு தரவேண்டும்;அந்தக்
காட்டு வெளியினிலே;அம்மா! நின்றன்
காவலுற வேணும்!என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.’

'நல்லதோர் வீணை', 'மஹா சக்திக்கு விண்ணப்பம்’, 'அன்னையை வேண்டுதல்’ என்னும் பாடல்கள், அன்னையிடம் வரம் வேண்டி நிற்கும் கவிஞரின் எண்ணப் புதையல்களாகும்.

“இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே
எதற்குமினி உலைவதிலே பயனொன் றில்லை:
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சத்தியாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்;
பின்னையொரு கவலையுமிங் கில்லை; நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!'

பேதை நெஞ்சே: 1


என்று பேதை நெஞ்சை நோக்கிக் கவிஞர் உரைக்கும் உபதேசத்தில், வாழ்வின் உயர்ந்த தத்துவமே அடங்கிக் கிடக்கின்றது. 'முத்துமாரி' என்றும் பாடலில், 'மனம் வெளுக்க வழியில்லை', 'பேதைமைக்கு மாற்றில்லை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/44&oldid=1461232" இலிருந்து மீள்விக்கப்பட்டது