பக்கம்:வாழையடி வாழை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை


தென்திருவாங்கூரைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டின் தேரூரில் கி. பி. 1876ஆம் ஆண்டு. கவிமணி அவர்கள் 'சிவதாணுப் பிள்ளை’க்கும், 'ஆதி லட்சுமி அம்மை’ யாருக்கும் அருந்தவப்புதல்வராய்ப் பிறந்தார். திருவாவடுதுறை ஆதீனத்துச் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ்க்கல்வி பயின்ற இவர், முதன்முதல் 'அழகம்மை ஆசிரிய விருத்தம்’ என்னும் கவிதை நூலினை 1895 ஆம் ஆண்டில் இயற்றினார்; 1901இல் புத்தேரி புனிதவதி உமையம்மையாரை மணம் முடித்து, அவ்வாண்டே கோட்டாற்றுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியினை மேற்கொண்டார்; பின்னர்த் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரித் தமிழ் விரிவுரையாளராய் விளங்கினார்: சாசன ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நகைச்சுவை நூலினை வெளியிட்டார். இனிய நண்பர்களுடன் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், 1931 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று, 1936 ஆம் ஆண்டில் 'காந்தளுர்ச்சாலை’ என்னும் சரித்திர ஆராய்ச்சி நூலினை வெளியிட்டார். 1938ஆம் ஆண்டில் 'மலரும் மாலையும்' என்னும் இவரது கவிதைத் தொகுதி வெளி வந்தது. 1940இல் 'கவிமணி' என்னும் பட்டத்தைப் பெற்ற இவர், 1941இல் புத்தர் வரலாற்றினைப் பழகு தமிழில் கூறும் 'ஆசிய ஜோதி' என்னும் நூலினை வெளியிட்டார். 1945இல் 'உமார் கய்யாம்' என்னும் கவிதை நூல் வெளியாயிற்று. 1953இல் 'கவி மணியின் உரை மணிகள்' என்னும் நூலும், 'தேவியின் கீர்த்தனங்கள்', என்னும் இசை நூலும் வெளி வந்தன. 1954ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/53&oldid=1461238" இலிருந்து மீள்விக்கப்பட்டது