பக்கம்:வாழையடி வாழை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 'வாழையடி வாழை’

பாமரனும் பாரதியாரின் பாடலில் உயர்வைக் கூறு முகத்தான் 'புலவர் காய்ச்சல்' என்ற இழிசொல்லினைப் புறந்தள்ளுகின்றார் கவிமணி அவர்கள்.

'சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே அடா!-கவி

துள்ளும் மறியைப் போலே துள்ளுமே அடா கல்லும் கனிந்துகனி யாகுமே அடா பசுங்

கன்றும்பால் உண்டிடாது கேட்குமே அடா!’ கவிஞன் படைப்பாம் கவிதைக்கு நல்ல விமரிசன மன்றாே இவ்வடிகள்!

இது போன்றே கவிச்சக்கரவர்த்தி கம்பநாடரின் கவிதைச் சிறப்பினை,

“ அயன் படைப்பினையும்-திருத்தி

அழகு செய்திடு வோன்; நயம்தெ ரிங்துகதை-நடத்தும்

நாடகக் கவிஞன் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

குழந்தையைப் பற்றிப் பாடல்களைப் புனைந்த கவிஞர்களுள் கவிமணி முதன்மை இடத்தினைப் பெறு கிறார். நீங்கள் குழந்தைகள் போன்று ஆகுங்கள்; குழந்தைகள் போன்றவர்களே இறைவனடியை அணுகுதற்குத் தகுதியுடைவர்கள் என்ற ஏசுபெருமான் பொன்மொழியினைக் கருத்திற்கொண்டு, குழந்தைப் பாடல்களை நெஞ்சம் கொள்ளை கொள்ளும் வண்ணம் கவிமணி பாடியுள்ளார். குழந்தையைத் தாலாட்டும் தாய், பின் வருமாறெல்லாம் பாடுகின்றாள்:

'முல்லை நறுமலரோ ?

  முருகவிழ்க்குங் தாமரையோ?  மல்லிகைப் பூவோ ?
   மருக்கொழுந்தோ? சண்பகமோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/56&oldid=1340663" இலிருந்து மீள்விக்கப்பட்டது