பக்கம்:வாழையடி வாழை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 55

நெஞ்சிற் கவலையெல்லாம்

  நீங்கத் திருமுகத்தில், புன்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
  போற்றும் இளமதியோ?”
               -தாலாட்டு:3,6 இவ்வாறு குழந்தையின் பெருமையினைக் கூறிய அவர், நெஞ்சை உலுக்கும் அவலத்தோடு, 'ஆசிய ஜோதி'சயில் குழந்தையை இழந்த தாயின் வருத்தத்தினை வடித்துள்ளார். 'சுஜாதை’ என்ற தாயின் மகவினை அரவு தீண்டி அக்குழந்தை இறந்து விடு கின்றது. சுஜாதை நெஞ்சிற் கிடத்தியும், நித்திரை நீக்கிக் காத்தும், விஞ்சு தவத்தினில் பெற்றும், பின்னைப் பிரிந்தறியாமலும், நிழலாய் இருந்த ஒரேபிள்ளை பிரிந்து விட்டதனைப் பொறுக்க இயலவில்லை. ஆற்றொணாத் துயரம் வந்து அவளை அலைக்கழிக்கின்றது. அவல ஓலம் அவள் அடி மனத்திலிருந்து பொங்கிப் பீறிடுகின்றது. புத்த பகவானிடத்தில் சென்று தன் மகவை உயிர்ப்பிக்குமாறு வேண்டி நிற்கும்போது, குழந்தை யின் நிலையினை ஆறாத் துயரத்தோடு எடுத்துரைக் கின்றாள் சுஜாதை:

வாய்முத்தம் தாராமல் மழலையுரை யாடாமல், சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்தைதடு மாறுதையா! .............................. பின்னி முடுச்சிடம்மா!பிச்சிப்பூ சூட்டிடம்மா!’ என்னும் மொழிகளினி எக்காலம் கேட்பனையா? நெஞ்சிற் கவலையெல்லாம் நிற்காமல் ஓட்டும் அந்தப் புஞ்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா! இட்டளைந்து கூழை எனக்கு இன்னமுதம் ஆக்கியகை கட்டழிதல் கண்டுமனம் கறங்காய்ச் சுழலுதையா! சோலைப் பசுங்கிளிகள் தோழனையும் காணாமல் நாலு திசைகளிலும் நாடித் திரியாவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/57&oldid=1340681" இலிருந்து மீள்விக்கப்பட்டது