பக்கம்:வாழையடி வாழை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ‘வாழையடி வாழை’

சித்திரத் தேரும் சிறுபறையும் கூடிஎனப்

பித்திலும் பித்தி பெரும்பித்தி ஆக்குதையா!’ இந்தப் பாடல்களைப் படிக்கும் போது நம் கண்களில் நாமறியாமல் நீர் பெருக்கெடுக்கின்றது.

ஓசை நயமே உயர் கவிதையின் இனிமைக்குதவும் கருவியாகும். கவி மணியின் பாடல்களில் எளிய சந்தநயம் யாண்டும் விளங்கக் காணலாம். சான்றாக,

வட்ட மாயுன் கழுத்திலே

வான வில்லை ஆரமாய் இட்ட மன்னர் யாரம்மா?

யான் அறியக் கூறம்மா!

பவழக்காரத் தெருவிலே

பவழங்காண வில்லையாம்; எவர் எடுத்துச் சென்றனர்?

எனக்கறிந்து சொல்வையோ -மலரும் மாலையும் : கிளியை அழைத்தல் : 3, 5

‘பசுவும் கன்றும்' என்னும் பாடல் எளிமையின் இமயம் எனலாம். அன்பில் அடித்தளம் அமைத்து, எளிமையில் இனிமை கண்டு, கருத்தில் உயர்வு கொண்டு, கேட்டார்ப் பிணிக்குக் தகையவாய்ச் சொற்கள் துலங்கி, உயிரோட்டம் ஊட்டி நிற்கும் கவிதை இனிமையெலாம் இப்பாடலில் விளங்கக் காணலாம்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு-அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி 'அம்மா’ என்குது வெள்ளைப்பசு-உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/58&oldid=1340686" இலிருந்து மீள்விக்கப்பட்டது