பக்கம்:வாழையடி வாழை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 59

'பாடு படுபவர்க்கே-இந்தப் பாரிடம் சொந்தமையா! காடு திருத்திநல்ல-நாடு காண்ப தவரலவோ?’ 'மந்திர மோதுவதால் எங்கும் வயல்வி ளைவதுண்டோ? தந்திரப் பேச்சாலே-அரிசி சாத மாயிடுமோ?'

'கட்டும் ஆடையாகப்-பருத்தி

காய்த்தளிப்ப துண்டோ? சட்டி 
பானையெலாம்-மண்ணில்

தாமே எழுவதுண்டோ?' என்று கூறி, உலகம் வாழ வேண்டுமானால், தொழில்கள் வளர வேண்டும்’ என்றும், ஏழையென் றொருவன் உலகில் இருத்தலாகாது’ என்றும் கூறு கின்றார்.

தமிழிசையில் தணியாத பற்றுடையவர் கவிமணி. தமிழிற்கு இசையுண்டோ?’ எனச் சிலர் பொல்லாங்கு பேச, புயலெனச் சீறியெழுந்த அண்ணாமலை அரசர் சென்னையில் தமிழ் இசைச்சங்கம் கண்டார். தமிழிசை தழைத்தது. அந்நிலையில் கவிமணி பின்வரும் பாடலை எழுதினார்:

‘வெந்தழல் நீரா மால், வெள்ளெலும்பு பெண்ணுமால்; வந்தமத வேழம் வணங்கிடுமால்-சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்?’, இவ்வெண்பாவில் கவிமணியின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றுப் புலனாதல் காண்க.

கீர்த்தனங்களையும் எழுதிக் கீர்த்தி கொண்டவர் கவிமணி, தமிழிசை இயக்கத்திற்கு இவர் செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/61&oldid=1341057" இலிருந்து மீள்விக்கப்பட்டது