பக்கம்:வாழையடி வாழை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 'வாழையடி வாழை’

தொண்டு சிறப்பிடம் வகிக்கத் தக்கது, சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.

தில்லையப்பன் இராகம்-கரகரப்ரியா) (தாளம்-ஆதி

      பல்லவி  சொன்னதெல்லாம் மறந்தாரோ? என்னைச் சோதனை செய்யத் துணிந்தாரோ?

அநுபல்லவி செந்நெற் கழனி சூழும்

தில்லைப் பதியார் அன்று கன்னம் குழியமுத்தம்

கனிந்து கனிந்தளித்துச் (சொன்ன)

சரணம் வருவார் வருவார்என்று நித்தம்-வரும்

வழிமேல் விழியாய் நின்றேன், தோழி! ஒருவாரம் ஒருமாதம்

ஒருவரு ஷம்போச்சே ஒருத்தி கிறுக்கி என்றிவ்

ஆரும் சிரிக்க லாச்சே (சொன்ன) அடுத்து, கவிமணியினைச் சிறந்த மொழி பெயர்ப்புக் கவிஞர் எனலாம். உமார்கய்யாம் பாடல்கள் இக் கூற்றிற்கு நல்ல சான்று பகரும். நிலையாமையின் நிலையினை,

புலர்ந்து விடியும் பொழுதினிலே

பொய்கைக் கரையஞ் சோலையிலே, மலர்ந்து நல்ல மணம்வீசி

மகிழும் மலர்கள் ஆயிரமாம்; உலர்ந்து வாடிச் சேற்றினிலே

உதிரு மவையும் ஆயிரமாம்; கலந்து உலக வாழ்வை இதில்

கண்ணாற் கண்டு தெளிவாயே

-உமர்கய்யாம் பாடல்கள் : 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/62&oldid=1341059" இலிருந்து மீள்விக்கப்பட்டது