பக்கம்:வாழையடி வாழை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 6t

“மலரும் மலர்கள் வாடலும், இவ்வாழ்வு நிலையா தோடலும் உலகம் கண்ட உண்மைகள் என்று உரைத்திடும் கவிமணி, கண்ணிற்காணுச் சொர்க்கம் கனவென்றும், கண்ணும் கைப்பொருள்தனை கம்பியிருக்க வேண்டுமென்றும், நண்ணாத பொருளை நச்சி நாளும் எண்ணி எண்ணி ஏங்கி அலைவதில் பயனில்லை என்றும் அறிவுறுத்துகின்றார். -

'அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற தத்துவத்தினை,

நாடும் வெற்றி தோல்விகள் எந் நாளும் பந்து விரும்பிடுமோ? ஆடு மவரின் அடிக்கேற்ப அங்கும் இங்கும் அலைந்திடுமால்: நீடும் இந்த நிலமீது நின்னைத் தூக்கி இட்ட அவன் ஈடு செய்வான் இரங்கிடுவான் யாவும் அறிவான், நன்கறிவான்’

-உமார்கய்யாம் பாடல்கள் : 51

என்னும் பாடலில் விளக்கியுள்ளார்;

எழுதிச் செல்லும் விதியினை,

எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும்

சூழ்ச்சி பலவும் செய்தாலும், வழுவிப் பின்னால் நீங்கியொரு

வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணி ராறெல்லாம்

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ!’

-உமார்கய்யாம் பாடல்கள் : 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/63&oldid=1341202" இலிருந்து மீள்விக்கப்பட்டது