பக்கம்:வாழையடி வாழை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 வாழையடி வாழை

இந்நாள் இனிய நாளானால்

இறந்த நாளுக்கு இரங்குவதேன்? பின்னாள் எண்ணி நடுங்குவதேன்?” என்று வாழும் நெறியினை வடித்துரைக்கின்றார்,

உமார்கய்யாம் பாரசீக மொழியில் பாடிய பாடலைப் 'பிட்ஜிரால்ட்’ என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கவிமணி, மூலத்தையும் விஞ்சும் வகையில் கவிதை புனைந்து வாகை சூடியுள்ளார் என்பதனை, இரு கவிதைகளையும் ஒப்பிட்டுக் காண்பவர் ஒப்புக் கொள்வர்

ஆங்கிலம்:

Herewith a loaf of bread beneath the bough A flask of wine, a book of verse—and Thou Besides me singing in the wilderness and wilderness is Paradise now.

கவிமணியின் தமிழ் மொழிபெயர்ப்பு

'வெய்யிற் கேற்ற நிழலுண்டு;

வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு;

கலசம் நிறைய மதுவுண்டு; தெய்வ கீதம் பலவுண்டு;

தெரிந்து பாட நீயுண்டு; வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?'

இது, மூலத்தையும் விஞ்சிய மொழி பெயர்ப்பு என்பதோடு, தமிழ் மரபிற்கு இயைந்த முறையில், தமிழ்ப் பண்பாட்டின் வழியில் மலர்ந்த கவிதை என் பதிலும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/64&oldid=1341209" இலிருந்து மீள்விக்கப்பட்டது