பக்கம்:வாழையடி வாழை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. பாவேந்தர் பாரதிதாசனார்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், கி. பி. 1891-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்து, இருபதாம் நூற்றாண்டில் இணையிலாத கவிஞராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசனார். 'கனக சுப்புரத்தினம்’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், பாரதியாரின் தொடர்பால், அவர்பால் தாம் கொண்ட மதிப்புக் காரணமாகப் பாரதிதாசனார் என்று தம் பெயரினை மாற்றியமைத்துக் கொண்டார். இளமையிலேயே தமிழிலும் பிரஞ்சு மொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்த பாரதிதாசனார், தம் பதினெட்டாம் வயதிலேயே தமிழாசிரியர் பணியினைத் தொடங்கினார். தொடக்கக் காலத்தில் பள்ளியிலும், பின்னர் அரசாங்கக் கல்லூரியிலும் தமிழ்ப்பணியினைத் திறம்பட ஆற்றிய இவர், இளமைப் பருவத்திலேயே சிறுசிறு பாடல்கள் புனைவதுண்டு. ஒருநாள் நண்பர் ஒருவரின் திருமணத்திற்குப் போயிருந்தார் நம் கவிஞர். விருந்திற்குப்பின் பாரதியாரின் நாட்டுப் பாடல்களை நயமுறப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்ததை நம் கவிஞர் அறியார். அப்பாடலே கவிஞரைப் பாரதியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. பாரதியார் 'ஒரு பாடலைப் பாடு' என்று சொல்ல, சற்றும் தயங்காமல் கவிஞர் அவர்கள்,


'எங்கெங்குக் காணினும் சக்தியடா!தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்!அந்தத்
தாயின்கைப் பந்தென ஓடுமடா!ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ:எனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/66&oldid=1461243" இலிருந்து மீள்விக்கப்பட்டது