பக்கம்:வாழையடி வாழை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

‘வாழையடி வாழை’


கருங்குரங்குகளின் அகவாழ்வினைக் கூறிக் கற்பொழுக்கத் திண்மையின் எல்லையினை வற்புறுத்தியுள்ளார். 'கடுந்தோட்கரவீரன்’ எனும் சங்கப் புலவர் (குறுந்: 66), இங்குக் கவிஞர் புறாவின் ஒழுக்கத்தினைக் கூறுமுகத்தான் மனித சமுதாயத்தின் களைகளுக்கு மாற்றுக் கூறி அறிவுரை புகட்டுகின்றார். அப்பாடல் வருமாறு:


'ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல்
ஒளிபுரிந் திடநின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்’

—அழகின் சிரிப்பு: புறாக்கள்: 3


இன்னும், புறாக்கள் மனிதர்க்குப் பாடம் புகட்டுவதாகவும், அன்புக்கோர் எடுத்துக்காட்டாவதாகவும் கவிஞர் பாடல் புனைந்துள்ளார்.

கிளியினைக் கவிஞர் வருணித்துள்ள பாடலைப் படிக்கும்பொழுது, கோலக் கிளியே நம் கண்முன்னர் வந்து நிற்கின்றது.


'இலவின்காய் போலும் செக்கச்
செவேலென இருக்கும் மூக்கும்
இலகிடு மணத்தக் காளி
எழில்ஒளி செங்காய்க் கண்ணும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/74&oldid=1461251" இலிருந்து மீள்விக்கப்பட்டது