பக்கம்:வாழையடி வாழை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 73


நிலை ஒளி தழுவும் மாவின்
நெட்டிலை வாலும், கொண்டாய்!
பலர் புகழ் நின்ற பச்சைப்
பசுங்கிளி ! வாராய்! வாராய்!'

—அழகின் சிரிப்பு: கிளி:1


கிளியின் இருவகைப் பேச்சினைக் குறிப்பிடும் போது, 'கனியிருப்பக் காய் கவரும்' மனிதர் மடைமையினைக் கவிஞர் சாடுகின்றார்:


'காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணிர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!

—அழகின் சிரிப்பு: கிளி:7


சிற்றுார்க்கும் பேரூர்க்குமுள்ள வேறுபாட்டினைக் கவிஞர் பின் வருமாறு கூறுவார்:

'இயற்கையின் எழிலை யெல்லாம்
சிற்றுாரில் காண ஏலும்:
செயற்கையின் அழகை யெல்லாம்
பட்டணம் தெரியக் காட்டும்;
முயற்சியும் முழுது ழைப்பும்
சிற்றுாரில் காணு கின்றேன்;
பயிற்சியும் கலையு ணர்வும்
பட்டணத் திற்பார்க் கின்றேன்!'

—அழகின் சிரிப்பு: பட்டணம்:8


இயற்கையாக நிகழும் நிகழ்ச்சியின்மேல் கவிஞன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுதல் 'தற்குறிப்பேற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/75&oldid=1461252" இலிருந்து மீள்விக்கப்பட்டது