பக்கம்:வாழையடி வாழை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 வாழையடி வாழை எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் வாழ்க்கையின் போகி கும் தெளிவும் எவ்வாறு இருந்தன? என்பதை அறிவதற் குத் தேவைப்படுகின்றன பழைய இலக்கியங்கள் எனலாம். ஆயின், அந்த இலக்கியங்கள் மட்டும் இன்று நம் வாழ்வின் தேவையை நிறைவு செய்துவிட மாட்டா.இன்றைய சூழ்நிலையில் இன்றைய வாழ்வின் அடித் தளத்தைக் கருவாகக் கொண்டு எழுகின்ற இன்றைய இலக்கியங்கள் நம் வாழ்வினை-நம்மைச் சுற்றி வாழும் கோடானுகோடி மக்களோடு நம்மை அறிமுகப்படுத்தி வைக்க இயலும். இன்றைய இலக்கியங்களை நாம் படித்தால்தான்,நம் பழைய தலைமுறையினரின் வாழ்க்கையோடு நம் இன்றைய வாழ்வினை ஒப்பிட்டுக் கண்டு உயர இயலும்.

'நம்மைச் சுற்றி வாழும் வாழ்க்கையினைத் தெரிந்து கொள்வதற்கு இலக்கியம் தேவையா?' என ஒரு சிலர் வினவலாம். எல்லோரும் வாழ்க்கையினைக் காண் கின்றாேம். எனினும், ஒரு சிலரால்தான் உள்ளதை உள்ளவாறும், உள்ளதை உணர்ந்தவாறும் எடுத்துக் காட்ட இயல்கின்றது. இந்த வகையில், படைக்கும் கலைஞன் நம்மைவிட உயர்ந்தவனுகின்றான்.

மேலைநாட்டினர் பலரும் இன்றைய இலக்கியங் களைப் பேரளவில் விரும்பிப் படிக்கின்றனர்; இன்றைய எழுத்தாளர்களுக்குச் சிறந்த மதிப்புத்தந்து போற்று கின்றனர்; அவர்தம் படைப்புகளைப் பாராட்டுகின்றனர்; 'இன்றைய வளர்ச்சிக்கு வழிகோலுபவை புதிய இலக்கியங்களே' என்கின்றனர். அமெரிக்கர் இந்த நூற்றாண்டு இலக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

நாம், அண்மையில் நடந்த இந்திய சீன எல்லைப் போரினை உளம் பதைக்க உயிர் துடிக்க உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/8&oldid=1332281" இலிருந்து மீள்விக்கப்பட்டது