பக்கம்:வாழையடி வாழை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

‘வாழையடி வாழை’


வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!
வாழியஇங் கிவையெலாம்! எழுதவரும் கவிதை!
கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோவந்து விட்டாள்!
கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!’

'இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்', என்ற கம்பர் கூற்று.

'என்னுளத்தில் தன்வடிவம் இட்ட எழில் மங்கை
இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்'

என்று எளிய தமிழில் நடைபோடுகின்றது.

காதலுக்கு ஏற்படும் தடையினைக் கவிஞர்,

'ஒட்டும் இரண்டுளத்தைத்—தம்மில்
ஓங்கிய காதலினை
பிட்டுப்பிட் டுப்புகன்றார்—அதைப்
பெற்றவர் கேட்கவில்லை
குட்டை மனத்தாலே—அவர்
கோபப் பெருக்காலே
வெட்டிப் பிரிக்கவந்தார்—அந்த
வீணையின் நாதத்தினை!'

என்றும் நெஞ்சில் ஈரம் கசிய மொழிந்துள்ளார். மேலும் காதலின் நெஞ்க உணர்வினை,

'அண்டைஇல் லத்தினிலே—என்
அன்பன் இருக்கின்றான்!
உண்ணும் அமுதிருந்தும்—எதிர்
உண்ண முடிந்ததில்லை!
தண்டமிழ்ப் பாட்டிருந்தும்—செவி
சாய்த் திடக் கூடவில்லை!
வண்ணமலர் சூடவில்லை-அது
வாசலிற் பூத்திருந்தும்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/80&oldid=1461257" இலிருந்து மீள்விக்கப்பட்டது